Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபோதையில் தகராறு.. மனைவியை கொலை செய்த கணவர் கைது

மதுபோதையில் தகராறு.. மனைவியை கொலை செய்த கணவர் கைது

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (38), அவரது மனைவி சுதா (28) இருவரும் ஒன்றாக வீட்டில் மது அருந்தியபோது, மேலும் மது வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன், சுதாவின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்ததாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் அதே வீட்டில் தூங்கிய லோகநாதன், மறுநாள் சுதா உயிரிழந்ததை அறிந்து வீட்டை பூட்டிவிட்டு தப்பினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!