கேரளா, கேரளம் ஆனது போன்று மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்றுவதற்கான மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என அம்மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். ஊடகத்தில் பேசிய அவர், வரலாற்று சிறப்புமிக்க அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே இப்பெயர் முன்மொழியப்பட்டதாகவும் கூறினார். வங்காள மொழியில் பச்சிம் என்றால் மேற்கு என்றும், பங்கா என்றால் வங்கத்தையும் குறிக்கிறது.
மேற்கு வங்கத்தின் பெயரும் விரைவில் மாற்றம்
