சென்னை திருவொற்றியூர் அருகே வடமாநில தம்பதியின் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “கடந்த 5 மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் குறித்தும், பொறுப்பற்ற தவெக ஆட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களை எண்ணியும் மனம் வருந்துகிறது” என வேதனை தெரிவித்து உள்ளார்.
டிக்கெட் புக்
வீண் விளம்பரத்திற்காக ஒரு சினிமாத்தனமான சிறப்புப் படையை உருவாக்கியதைத் தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்த அரசு எடுத்துள்ள பயனுள்ள நடவடிக்கை தா என்ன? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதோடு, அவருக்கு நீதி கிடைப்பதையும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
