திருப்பூரில் 13 பேர் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்ததும், அவர்களில் 4 பேர் சிறுவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. தூத்துக்குடி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு திருப்பூருக்கு வருபவர்களை சிலர் பஸ் நிலையத்திலேயே மடக்கி பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்ததும் தெரியவந்தது. குறைந்த சம்பளம் வழங்கி, வெளித்தொடர்பு இல்லாமல் தங்கவைத்து வேலை வாங்கியதும் விசாரணையில் அம்பலமானது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூரில் கொத்தடிமையாக இருந்த 13 பேர் மீட்பு
