சென்னை: பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களை நகரின் மையப்பகுதியில் இணைக்கும் வகையில் பேருந்து சேவை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி மெட்ரோ நாளை செயல்பாட்டுக்கு வரும்நிலையில் மாநகர போக்குவரத்து கழகம் பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பூந்தமல்லி – போரூர் வடபழனி வழித்தடத்தில் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.11 மெட்ரோ ரயில் நிலையங்கள் வழியாகவும் இணைப்பு பேருந்து சேவை மேம்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்புப் பேருந்து சேவை வழங்கப்படுவது பயணிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லவும், அங்கிருந்து தங்களது அடுத்த இடங்களுக்குப் பயணத்தைத் தொடரவும் இந்தச் சேவை உதவியாக இருக்கும்.
