தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. செவ்வாய்க்கிழமைகளில் மகளிர் கடன் மற்றும் வீட்டு வசதிக் கடன் முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைக் கடன் முகாம்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெறத் தகுதியுள்ளவர்கள், தங்களுக்குத் தேவையான உரிய ஆவணங்களுடன் முகாம்களில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாரந்தோறும் கூட்டுறவு கடன் முகாம்கள்
