தெலங்கானா மாநிலம் காந்தாரி நகரில், நைட்டி அணிந்து ஆம்புலன்சில் வந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்சில் வந்த அவர்கள், கேஸ் கட்டர் கருவியைப் பயன்படுத்தி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறான வேடமணிந்து, ஆம்புலன்சை பயன்படுத்தி வந்த கொள்ளையர்களின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நைட்டி அணிந்து வந்து ATM-ல் திருட்டு.. சிக்கிய சிசிடிவி
