பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சென்னையில் போராடவிருந்த பன்னோக்கு மருத்துவ பணியாளர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது X பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சிக்கு வரும்முன் அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, போராட புறப்படும்முன்பே கைது நடவடிக்கை மேற்கொள்வதோடு, நேரில் அழைத்து பேசாமல் அடக்குமுறையை ஏவுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவப் பணியாளர்களை உடனே விடுவிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்!
