நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று (அக்.15) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மோகன் லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் திருச்சி மாவட்டத்தில் கண்டோன்மென்ட், மெயின் கார்டு கேட், ஸ்ரீரங்கம்,

திருவெறும்பூர், துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
பட வெளியீட்டை முன்னிட்டு, திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சோனா – மீனா

திரையரங்கில் திருச்சி மாவட்ட தலைமை ரஜினிகாந்த ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மேள தாளங்கள் முழங்க, வெடிகள் வெடித்து,

வண்ண காகிதங்களை தூவி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும்,

அருகில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் இருந்து பூ தட்டுகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக

திரையரங்கிற்கு கொண்டுவரப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பதாகைகளுக்கு பூ தூவி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சூப்பர் ஸ்டாரின் படம் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
