தமிழகத்தின் ஈரோட்டில் மஞ்சள் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.20,000-க்கு விற்ற ஒரு குவிண்டால் மஞ்சள், தற்போது ரூ.23,000 வரை உயர்ந்துள்ளது. செப்டம்பரில் ரூ.15,000-க்கு விற்ற மஞ்சள், சில வாரங்களில் இந்த அதிரடி உயர்வை கண்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவமழை பொய்த்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. போதிய மழையின்மை காரணமாக மஞ்சள் சாகுபடி பரப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
ஈரோடு மஞ்சள் புதிய உச்சம்- ரூ.23,000-ஐ தொட்ட குவிண்டால் விலை
