தமிழகத்தின் புதிய முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர அர்லேகர், சென்னை லோக் பவனில் இன்று (அக்.15) பதவியேற்றுக் கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முழுநேர ஆளுநர் இல்லாமல் இருந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்த உத்தரவின்படி கேரள ஆளுநராக பணியாற்றிய அவர் தற்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தமிழக முதல்வர் விஜய் இன்று மாலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் பொறுப்பேற்பு
