அரசு ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தனது அறிக்கையில், தீபாவளிக்கு இன்னும் 3 வாரமே உள்ளது. ஆனால் தற்போதுவரை போனஸ் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனே போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி போனஸ்… தமிழக அரசுக்கு அன்புமணி டிமாண்ட்!
