பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி நடித்து வரும் ‘கன்மாஸ்டர் ஜி9’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்ததில், அருகில் நின்று கொண்டிருந்த இம்ரான் ஹாஷ்மிக்கு அருகில் விழுந்து பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் நடிகர் இம்ரான் ஹாஷ்மி எந்தவித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பியிருப்பதாகவும், அவர் முழு நலமுடன் இருப்பதாகவும் படக்குழு கூறியுள்ளது.
படப்பிடிப்பில் விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் இம்ரான் ஹாஷ்மி
