Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மீண்டும் பெண் இரயில்வே காவலரை தாக்கிய இளைஞர் கைது

மீண்டும் பெண் இரயில்வே காவலரை தாக்கிய இளைஞர் கைது

திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் கும்பகோணம் வந்தபோது ரயிலில் படியில் தொங்கியவாறு வந்த ஆகாஷ் என்ற நபரை உள்ளே செல்லுங்கள் என ரயில்வே பெண் காவலர் கூறியுள்ளார்.அதற்கு அந்த நபர் அந்த பெண்காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெண் காவலரை மூர்க்கத்தனமாக தாக்கியதில் காவலர்பெண் படுகாயம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசிகவினரின் சாலை மறியல் போராட்டத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளரை ஆகாஷ் என்ற இளைஞர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதால், இளைஞர் திருப்பி

தாக்கியதாக அவருக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் விரைவு ரயிலில் படியில் நின்று பயணம் செய்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பெண் காவலர் உள்ளே வருமாறு கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் பெண் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!