எம் பி கனிமொழி கருணாநிதி – செய்தியாளர் சந்திப்பு: தேர்தலுக்கு முன்பே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்..
தற்போது நாடு முழுவதும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு திமுக துணை நிற்பதாகக் குறிப்பிட்ட அவர், போராட்டம் தொடரும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பாஜகவை விமர்சிக்கத் துணிவின்றி, SIR நடவடிக்கை தொடர்பாக திமுக மீது குற்றம்சாட்டுவதாக விமர்சித்தார்.
கொளத்தூர் தொகுதியில் நடந்தது குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெளிவாக விளக்கியுள்ளதாக தெரிவித்தார்…
