TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை ‘ஒழிப்பு’ பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை ‘ஒளிப்பு’ எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
TVK ஒரு Breaking Bad Party – ஸ்டாலின் விமர்சனம்!
