அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள சிறையில் அதிகாரியாகப் பணியாற்றிய கார்லா பெல்ட்ரான், கைதிகளுடன் மிக நெருக்கமாகப் பழகியதாலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாலும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ம் தேதி பணியில் சேர்ந்த கார்லா, சிறைவாசிகளுடன் மிகவும் நட்பாகப் பழகியுள்ளார். இது சிறை அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர் பணியில் சேர்ந்த 100 நாட்களுக்குள்ளேயே அவரை வேலையிலிருந்து நீக்கி சிறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைக் கைதிகளுடன் புகைப்படம்.. பெண் அதிகாரி பணி நீக்கம்
