இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். விஜய் நடிகராக இருந்த போது தேவா, விஷ்ணு, குஷி, பகவதி உள்ளிட்ட பல படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.
தேவா மறைவு.. முதல்வர் விஜய் இரங்கல்
