அமெரிக்கா துணை அதிபரான ஜே.டி.வான்ஸ், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். தனியார் ஊடக நிகழ்ச்சியில் பேசிய அவர், தனக்கு 4 சிறு குழந்தைகள் உள்ளதாலும், தனது மனைவிக்கு அரசியல் களத்தில் பெரிய அளவில் விருப்பம் இல்லாததாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் தன்னை முக்கிய வாரிசாக அடையாளம்ட்டியுள்ள போதிலும், வான்ஸ் தேர்தல் களத்தில் இருந்து விலகியுள்ளதால் குடியரசு கட்சியில் அடுத்த வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில்லை – ஜே.டி. வான்ஸ் அறிவிப்பு!
