Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள கோயில்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில், புதிதாகக் கல்வி கற்கத் தொடங்கும் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று, தங்களது கல்விப் பயணத்தைத் தொடங்கினர்.

தர்மபுரியில், 25-வது ஆண்டாக கேரளம் சமாஜம் சார்பில் பள்ளிக்குச் செல்லவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குழந்தைகளின் நாவில் தங்க எழுத்தாணியால் எழுதி ஆசீர்வதிக்கப்பட்டது.

நாகர்கோவிலில் உள்ள வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், அரிசி மற்றும் நெல்லில் குழந்தைகளின் கைகளைப் பிடித்து, பெற்றோர்கள் ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்தனர்.

மதுரையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள 2,143 அங்கன்வாடி மையங்களில் விஜயதசமியை முன்னிட்டு முன்பருவக் கல்விச் சேர்க்கை தொடங்கப்பட்டது.

சேரியந்தல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கைகளைப் பிடித்து, அரிசியில் ‘அ’ என்ற எழுத்தை எழுத வைத்து அவர்களின் கல்விப் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.

கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், நவதானியங்களில் குழந்தைகளின் கைகளைப் பிடித்து தமிழ் உயிரெழுத்துகளை எழுத வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்றனர்.

இதேபோல், சிவகாசி, கரூர், திருவாரூர், திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டி பெற்றோர்களும் பொதுமக்களும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!