திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் AK23 மூலம் வந்த தம்பதியினரிடம் இருந்து ரூ.2.26 கோடி மதிப்பிலான 1,600.5 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு (AIU)

அதிகாரிகள் நடத்திய சோதனையில், தங்கம் உள்ளாடைகளிலும் கைப்பையிலும் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடத்தி வரப்பட்ட 1,600.5 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தைக் கடத்தி வந்த தம்பதியினரை சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
