நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் இன்று (அக்.24) முதல் அக்.26 வரை உதகைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கேத்ரின் நீர்வீழ்ச்சி மற்றும் கோடநாடு காட்சிமுனை ஆகியவையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இன்றும் நாளையும் உதகை சுற்றுலாவைத் தவிர்க்க அறிவுறுத்தல்
