தமிழகத்தில் நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு இலவச வேளாண் மின் இணைப்புகளை வழங்குவதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். அதே நேரத்தில், தட்கல் மற்றும் சாதாரண திட்டங்களில் பல ஆண்டுகளாக காத்திருக்கும் மீதமுள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும் விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இலவச வேளாண் மின் இணைப்புகளை ஆண்டுக்கு 1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இலவச வேளாண் மின் இணைப்புகளை உயர்த்த வேண்டும்
