மத்திய பிரதேசம் கன்ஜ்பசோடாவில் வீட்டின் 3-வது மாடி பால்கனியில் நின்றிருந்த பிரபுலால் குப்தா (65) குட்கா மென்றுவிட்டு எச்சில் உமிழ்ந்துள்ளார். அப்போது அந்த எச்சில் அருகிலிருந்த 11 கேவி மின்சார வயரில் பட்டதில், மின்னோட்டம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். எதிர்பாராத இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பால்கனியிலிருந்து எச்சில் துப்பிய முதியவர் மின்சாரம் தாக்கி பலி
