வங்கக் கடலில் ‘அர்னாப் புயல்’ உருவானதை குறிக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 9 முக்கிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் இந்த எச்சரிக்கைக் கூண்டுகள் பறக்கவிடப்பட்டுள்ளன. புயல் உருவாகியுள்ளதை அடுத்து, துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
