போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் தர்பார் மேடு மீன் மார்க்கெட் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டு இருந்த வடக்கு தாரா நல்லூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
29 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் 5வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது அந்த நடை மேடை அருகே ஒரு மூட்டை கேட்பாரற்று கிடந்தது. இதனை பார்த்த ரயில்வே போலீசார்
உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பு செல்வன் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து 29 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த மர்ம ஆசாமி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலர் மோதி முதியவர் சாவு…
திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 60) இவர் நேற்று திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் அரியமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் நடந்து சென்றார் அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தைஓட்டி வந்த வாலிபர் எதிர்பாராதமாககுமார் மீது மோதினார். இந்த விபத்தில் முகத்தில் காயம் அடைந்த குமார் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனனக்கு அழைத்துச் செல்லப்பட்டார்அங்கு அவரை பரிசோதனை செய்து பார்க்க டாக்டர் குழுவினர் ஏற்கெனவே குமார் இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமையல் பொருள் விற்பனை பிரதிநிதி மாயம்
திருச்சி அக் 26- திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரன் நகர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கவின் பிரசன்னா (வயது 35 )இவர் சமையல் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 23ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி வினோலின் மார்க்கிரேட் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கவின் பிரசன்னாவை தேடி வருகின்றனர்.
திருவானைக்காவலில் கோவிலுக்கு வந்த பக்தர் மாரடைப்பால் சாவு
திருச்சியை அடுத்த நவல்பட்டு அண்ணா நகர் போலீஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் புலவேந்திரன் (68 ) வழக்கறிஞரான இவர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். பிறகு அவர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கோவில் வளாகத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல வெளியே வந்தார். அப்பொழுது திடீரென்று புலவேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கோவில் வளாகத்துக்குள் மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் பூலவேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து புலவேந்தரின் மகன் புகித் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட வந்த பக்தர் இறந்த சம்பவம் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
