கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி பஹுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தவறாக பெயர் சேர்ப்பதாக மிரட்டி தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மிரட்டியதாகக் குற்றச்சாட்டு – இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்
