ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருப்பதி கோவிந்தராஜ சுவாமி திருக்கோயில் மற்றும் திருமலை ஏழுமலையான் கோவிலில் பௌர்ணமி கருடசேவை உற்சவம் நேற்று (அக்.26) வெகுவிமர்சையாக நடைபெற்றது. தங்கக் கருட வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி, கோவிலின் நான்கு மாடவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு “கோவிந்தா… கோவிந்தா…” எனப் பக்தி கோஷங்களை எழுப்பிச் சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
திருப்பதி, திருமலையில் பவுர்ணமி கருடசேவை: திரளான பக்தர்கள் தரிசனம்
