விழுப்புரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசுவது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு (20), வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த மாதவன் (19) ஆகிய இருவரும் நாட்டு வெடிகுண்டு வீசுவது போன்ற காட்சிகளைப் பதிவு செய்து இன்ஸ்டாவில் ரீல்ஸ்-ஆக வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
வெடிகுண்டு வீசுவது போல் ரீல்ஸ்.. 2 வாலிபர்கள் கைது
