மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன் வெறும் ரூ.200-க்கு வாங்கிய அதிர்ஷ்ட குலுக்கல் சீட்டின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர ‘டொயோட்டா ஃபார்ச்சூனர்’ காரை வென்று அசத்தியுள்ளான். நவராத்திரி ‘கார்பா’ நிகழ்ச்சியையொட்டி ஒரு வருடத்திற்கு முன்பே அச்சிறுவனின் பாட்டி பேரனின் பெயரில் இந்த அதிர்ஷ்ட கூப்பனை வாங்கி வைத்திருந்தார். தற்போது விழா குழுவினர் குலுக்கல் முடிவை அறிவித்து, வெற்றி பெற்ற சிறுவனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளனர்.
ரூ.200 குலுக்கல் சீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள காரை வென்ற சிறுவன்
