அந்தமான் கடலில் இன்று (அக்.29) பிற்பகல் 3.19 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 5.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி கடற்கரையிலிருந்து தொலைவில் அமைந்திருந்ததால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எந்தவிதமான சேதமும் பதிவாகவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஸ்ரீ விஜயபுரம் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது
அந்தமான் கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
