திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பஞ்சபூர் தண்ணீர் தொட்டி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் ஞானகுமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ராம்ஜி நகர் காந்தி நகர் தொகுதி சேர்ந்த பவித்ரன் (வயது 22 )என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஞானகுமார் வழக்கு பதிவு செய்து பவித்திரனை கைது செய்து அவரிடமிருந்து 16 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார். இதேபோன்று இரட்டைமலை கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ராம்ஜிநகர் கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 24) என்பவரைசிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாலைராஜா கைது செய்து அவரிடம் இருந்து 1, கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.இதேபோன்று அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் ஒருவரை அரியமங்கலம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
