தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, திருவனந்தபுரம் வடக்கு – நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வண்டி எண் 06073, வருகிற 2, 9, 16ஆம் தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.50 மணிக்கு திருப்பூர் வந்தடையும். அதேபோல், வண்டி எண் 06074 வருகிற 5, 12, 19ம் தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) நிஜாமுதீனில் இருந்து புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 6.10 மணிக்கு திருப்பூர் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் வழி சிறப்பு ரயில் இயக்கம்
