சீனாவின் குவாங்டாங் மாகாணம், ஷுண்டே நகரில் உள்ள பிரபல உணவகத்தில் ராட்சத கரப்பான் பூச்சிகள் போன்ற தோற்றமளிக்கும் “வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ்” எனும் வினோத பலகாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இவை கரப்பான் பூச்சிகள் அல்ல, மாறாக “டைவிங் பீட்டில்ஸ்” எனப்படும் நீர் வண்டுகளால் செய்யப்படுபவை. இவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுபவை. உரிமையாளர் பேன் கூற்றுப்படி, இந்த வண்டுகள் வறுத்தெடுக்கப்பட்டு இனிப்பு முட்டை மீது வைக்கப்படுகின்றன. இது உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற தனித்துவமான சுவையைத் தருகிறது.
சீனாவில் கரப்பான் பூச்சி வடிவத்தில் வினோத பலகாரம் அறிமுகம்
