செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் புறவழிச்சாலையில் 3 அரசு பஸ்கள் இன்று (நவ.2) அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்துகள் எதிர்பாராதவிதமாக ஒன்றன்பின் ஒன்றாக மோதியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்துகளின் முன்பகுதிகள் சேதம் அடைந்தன. இருப்பினும், நல்வாய்ப்பாக பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து மோதிய 3 அரசு பஸ்கள்
