வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் ஆந்திராவை நோக்கி நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று (நவ.2) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
