வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‘முரசு’ புயல் தீவிரப் புயலாக மாறியுள்ளதாகவும், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் கரையைக் கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார். புயல் கரையைக் கடக்கும் வேளையில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நாளை காலை வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தீவிரப் புயலாக மாறியது முரசு- கரையைக் கடக்கும் நேரம் அறிவிப்பு
