தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வாழைத்தோட்டத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
உயிரிழந்த பெண் யார்? எவ்வாறு உயிரிழந்தார்? என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. பெண்ணின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
