சென்னை, வானகரத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிய சிறுவன் மீண்டும் கைது செய்யப்பட்டார். வழிப்பறி வழக்கில் சிறுவனை நேற்று போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்த நிலையில் காவல் நிலையத்தில் காவலர்களின் கையை உதறிவிட்டு சிறுவன் தப்பியோட்டம். தப்பியோடிய 17 வயது சிறுவனை கைது செய்து, காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
நேற்று வானகரம் காவல் நிலைய பகுதியில் வழிப்பறி வழக்கில் கைதான சிறுவன், போலீசின் பிடியிலிருந்து தப்பியோடியுள்ளார். மேற்கு முகப்பேரைச் சேர்ந்தவர் மதன்குமார், 22, அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 4ம் தேதி மாலை தாம்பரத்தில் உள்ள நண்பரை சந்திக்க செல்ல வழி தெரியாமல் தவித்த மதன்குமார், முகப்பேரில் நின்றுள்ளார்.
அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் வழி கேட்டுள்ளார். தாங்களும் அந்த வழியாக செல்வதாக கூறிய இருவரும், மதன்குமாரை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில், வாகனத்தை நிறுத்திய இருவரும், மதன்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் இல்லை எனக் கூறியதால் அவரை தாக்கிவிட்டு, மொபைல் போனை பறித்து தப்பினர்.இந்த வழிப்பறி வழக்கு தொடர்பாக விசாரித்த வானகரம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட நொளம்பூரைச் சேர்ந்த விக்னேஷ் 20, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அப்போது இரு போலீஸ்காரர்கள், காவல் நிலைய வளாகத்தில் வாகனத்தை நிறுத்தி. 17 வயது சிறுவன் உள்ளே அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, சிறுவன் போலீஸ்காரர்களின் கைகளை உதறிவிட்டு தப்பி நிலையில் சிறுவனை நேற்று நள்ளிரவு பிடிபட்ட சிறுவனை கைது செய்யத போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
