தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் 7 வயது சிறுவன் காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வீடுகள், தெருக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுவனைத் தேடும் பணி நடைபெற்றது. இதற்கிடையே, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மறைவான பகுதியில் சிறுவன் தூங்கிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனை பத்திரமாக மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி அருகே மாயமான 7 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!
