தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற கொலை சம்பவங்களை அடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் விடிய விடிய அதிரடி வேட்டையில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான ரவுடிகளை கைது செய்துள்ளனர். சென்னையில் 185 ரவுடிகள் உட்பட 222 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சையில் 33 ரவுடிகள் உட்பட 295 பேரும், சிவகங்கையில் 43 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும், நெல்லையில் 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குற்ற சம்பவங்களை தடுக்க தமிழகம் முழுவதும் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தொடங்கிய ரவுடிகள் வேட்டை.. 222 பேரை தட்டி தூக்கிய போலீஸ்
