Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூர் அருகே 15வயது சிறுமியிடம் அத்துமீறல்…வாலிபர் கைது

திருப்பத்தூர் அருகே வீட்டிற்கு வெளியே தூங்கிய 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது‌ மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் சிறுமியின் அருகில் படுத்துக்கொண்டு அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமியிடம் அத்துமீற முயன்றது கனமந்தூர் பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவரின் மகன் ஜூலியன் (23) என்பது தெரியவந்தது.

மேலும் ஜூலியன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து
திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!