தாத்தாவின் சொத்தைப் பாகப்பிரிவினை மூலம் தந்தை பெற்றிருந்தால், அதில் பேரனுக்குப் பிறப்புரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 1956-ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டப் பிரிவு 8-ன்படி, அத்தகைய சொத்து தந்தையின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை விற்பனை செய்வதோ, நிர்வகிப்பதோ தந்தையின் தனிப்பட்ட சுதந்திரம் என மகன் தொடர்ந்த 29 ஆண்டுகால சொத்து வழக்கில் நீதிபதிகள் அமர்வு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது – உச்சநீதிமன்றம்
