Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செஞ்சி சிறுமி வழக்கு: பெற்றோரிடம் சிபிசிஐடி டிஐஜி விசாரணை

செஞ்சி சிறுமி வழக்கு: பெற்றோரிடம் சிபிசிஐடி டிஐஜி விசாரணை

செஞ்சி சிறுமி வழக்கில் 20 நாட்களைக் கடந்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் நடுப்பட்டி கிராமத்தில் டிஐஜி விக்ரம் நேரில் விசாரணை நடத்தி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியரின் 7 வயது மகள் ஹேமலதா கடந்த அக்டோபர் 12ம் தேதி அதிகாலையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த நிலையில் மாயமானார். இதுவரை சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் செஞ்சி சிறுமி குறித்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கி 20 நாட்களைக் கடந்தும் சிறுமி குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சென்னை சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் இன்று (நவம்பர் 11) நடுப்பட்டி கிராமத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது சிறுமியின் தாயார் பவானி மற்றும் தந்தை வடிவேலு ஆகியோரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். டிஐஜி விக்கிரமன் சிறுமி வீட்டின் பின்புறம் உள்ள முள் புதர் பகுதிகளில் ஆய்வும் மேற்கொண்டுள்ளார். மேலும், வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!