மாமல்லபுரம் விடுதியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கிய தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், பெண் உறுப்பினர்கள் முதலில் முதல்வரைச் சந்தித்துப் பேசிவிட்டுப் புறப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களில் தங்களது தொகுதிகளில் மேற்கொண்ட பணிகள் குறித்து அவர்களிடம் முதல்வர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. பெண் எம்எல்ஏ-க்கள் சர்ச்சைகளில் சிக்காத சூழலில், அவர்களை முதலில் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு அனுப்பி வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: பெண் எம்எல்ஏக்களுடன் பேசி அனுப்பிய விஜய்
