அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் நவ.23-ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, சிம்ரன், ஸ்ரீலீலா ஆகியோருடன் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி வில்லனாக நடிக்க உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும், ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிச.12-ம் தேதி இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ள நிலையில், 2027-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினி-“தர்மன்” பட அப்டேட்
