வடக்கு வியட்நாமின் துயென் குவாங் மாகாணத்தில் திருமண ஊர்வலத்தின் போது பலத்த காற்றால் பூங்கொத்து பறந்து காரின் முன்பக்கக் கண்ணாடியை மறைத்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து சேறு நிறைந்த நெல் வயலில் கவிழ்ந்தது. உடனடியாக ஒன்றிணைந்த கிராம மக்கள் காரை உயர்த்திப் பிடித்து உள்ளே சிக்கியிருந்த மணமக்களைப் பத்திரமாக மீட்டனர். கர்ப்பிணியான மணமகளும் வயிற்றிலிருந்த குழந்தையும் நலமாக உள்ள நிலையில், திட்டமிட்டபடி திருமணச் சடங்குகள் இனிதே நடந்தேறின.
விபத்துக்குள்ளான திருமண கார்- மணமக்கள் பத்திரமாக மீட்பு
