Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 4 பேர் கைது- திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி மாயம்

திருச்சி சுப்பிரமணியசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (53 )
இவருக்கு 23 வயது மகள் உள்ளார். இந்நிலையில் அவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி காம் படித்து வந்தார்.நேற்று முன் தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத் தொடர்ந்து அப்துல் ரஹீம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி அதிகாரி வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது– மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

திருச்சி லிங்கா நகர் சண்முகா நகர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி தீபா (வயது 42 )இவர் தில்லை நகரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் காப்பீட்டு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர்
கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தனது 4 பவுன் நகைகளை வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு காலையில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த நகைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார் பின்னர் இது பற்றி தீபா உறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்த பரதன் (வயது 19) முத்தரசநல்லூர் காவிரி நகர் பகுதியை சேர்ந்த விஜயராஜ் (வயது21)ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து மூன்றே முக்கால் பவுன்
நகைகளை மீட்டனர்.மேலும் இந்த வழக்கில் திருச்சி சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த சச்சின் தேவராஜ் முத்தரசநல்லூர் மல்லியம்பத்து அமைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த தாபு என்கிற மதன் குமார் (வயது23) உறையூர் பாண்டமங்கலம் வெள்ளை என்கிற அகமது (வயது23) ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

மதுவுக்கு அடிமையான வியாபாரி சாவு

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை நாச்சி குறிச்சி கனக லட்சுமி நகர் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லாஹ் (வயது 48) இவர் திருச்சி பஜார் பகுதியில் கால ணி விற்று வந்தார்.
மதுவுக்கு அடிமையான அப்துல்லா சரிவர வீட்டுக்குச் செல்லாமல் கடை வராண்டாக்களில் படுத்து தூங்கி வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று முன்தினம் மரக்கடை பகுதியில் அப்துல்லா மயங்கி கிடக்கும் தகவல் அவரது மகன் வாஹித்துல்லாவுக்கு கிடைத்தது உடனே அவர் தந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அப்துல்லாஹ் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட நான்கு பேர் கைது

காந்தி மார்க்கெட் காவல் சரக்குக்கு உட்பட்ட மதுரை ரோடு கால்நடை மருத்துவமனை அருகாமையில் ரவுடி ஒருவர் போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை ஆட்டுக்கார தெரு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கௌரிஸ் என்கிற நவநீதகிருஷ்ணன் (வயது 28) என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 18 போதை மாத்திரைகள், 2 ஊசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது இதேபோன்று உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழராஜபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்ற உறையூர் பாண்டமங்கலம் புது காலனி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்கிற அரவிந்தராஜ் முப்பது என்பவரை உறையூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் கைது செய்தார் மேலும் உறையூர் புதூர் ஹை ரோடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த உய்ய கொண்டான் திருமலை கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த கோபி (வயது22) அரியமங்கலம் ஸ்ரீனிவாச நகர் சொக்கலிங்கம் தெரு பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 20) ஆகிய இரண்டு பேரை உறையூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கைது செய்தார் இவர்களிடமி ருந்து 40 போதை மாத்திரைகள் 3 ஆண்ட்ராய்டு செல்போன்கள் ஒரு மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டது.

error: Content is protected !!