திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்
தமிழக முதலமைச்சர் விஜய் போதை பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.மேலும் போலீசரும் தமிழக முழுவதும் போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி மாநகர் பகுதியில் கோதை மாத்திரை மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில்
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஈவிஆர் கல்லூரி எதிரில்
போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுதுபோலீசார் அதிர்ச்சி அடைந்தனர் அங்கு இரண்டு பெண்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் நோட்டமிட்டு கண்காணித்தினர். அப்பொழுது அந்த இரண்டு பெண்களும் போதை மாத்திரை கையில் வைத்திருந்தது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் அந்த இரண்டு பெண்களையும் பிடித்து கைது செய்தனர். இவர்களில் ஒருவர் திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர். மற்றொருவர் மதுரையை சேர்ந்தவர்.
இதையடுத்து கேகே நகர் போலீசார் இரண்டு பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் செல்போன், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.பிறகு போலீசார் இரண்டு பெண்களையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
