Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாட்றம்பள்ளியில் மதுபோதையில் லாரி ஓட்டிய ஓட்டுநர் கைது!

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரி மது போதையில் ஓட்டிய ஓட்டுநர் கைது பெரும் விபத்து தவிர்ப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பச்சூர் டோல்கேட் என்ற இடத்தில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மது போதையில் கண்டெய்னர் லாரியை தாறுமாறாக ஓட்டிச் சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, தேசிய

நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே தாறுமாறாகச் சென்றுள்ளது. இதனால் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அப்போது, லாரியின் பின்னால் காரில் வந்தவர்கள், லாரி தாறுமாறாகச் செல்வதைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதுடன், நாட்றம்பள்ளி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாட்றம்பள்ளி காவல்துறையினர் கண்டெய்னர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்த போது அவர் குடி போதையில் ரகளை ஈடுபட்டார் பின்னர் அவரிடம் தீவிர விசாரணை செய்ததில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் அன்பன் என்பது தெரிய வந்தது
தொடர்ந்து அவர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்தல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் செல்லும் கனரக வாகனங்கள் இதுபோன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் செல்வதால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் கனரக வாகன ஓட்டுநர்களைத் தொடர்ந்து கண்காணித்து, மது போதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!